Sunday, September 21, 2008

உறவினர்

சுற்றமும் உறவும் கூடி நின்று வாழ்த்தினர்
என் வீட்டு திருமணத்தில்
இந்த பந்தம் நீடித்தது வெகு நேரம்
மண வீட்டின் முதல் பந்தி வரை

விருந்தோம்பல்

சுற்றமும் உறவும் வீடும் இழந்து
தமிழனக்கு உரிய மாண்புகள் தொலைத்து
கொடும் கடலில் நெடும் பயணம்
கரையில் அன்புடன் அழைக்கிறான் தமிழன்
வாருங்கள் " அகதிகளே "

எரிதல்

இருள் பரவிய ஓரிடம் - அங்கு
இரு உயிர் கசியும் அந்த இருளிடம்
அங்கு எரிவது மோகத்தின் தீ அல்ல
விலை மகளின் வயிறின் வெற்றிடம்

திருடன்

தோசையை சுட்டார்கள் இத்தனை ஓட்டை
யாரப்பா சுட்டார்கள் சாலையில் இத்தனை ஓட்டை

கலவரம்

பேருந்தில் கலவரம்
அழகாக சிரிக்கிறார் வள்ளுவர்
அடக்கம் அமரருள் உய்க்கும்

இல்லை

வேலை இல்லாத காரணத்தால்
இன்று வேலையில் சேர்ந்தேன் - இங்கு
வேலை இல்லாமல் இருப்பதே
எனக்கு வேலையாக இருக்கிறது